Tuesday, April 7, 2009

நானும் இசையும் எழுத்தும்

இசைக்கு என்றுமே என் வாழ்வில் தனி இடம் உண்டு...
பதின் பருவம் முதலே 'என்னுடைய பாட்டு கேட்டு ஒரு சிறு கூட்டம் பரவசப்படும் சித்திரம்' என் பகற்கனவுகளை ஆக்கிரமித்திருக்கும். இது பெண்களை பற்றிய பகற்கனவுகளை விட அதிக மனக் கிளர்ச்சியை தருவதாக நான் உணர்ந்ததுண்டு. ஆனால் இசை கற்றுக்கொள்ள எந்த முயற்சியும் நான் எடுக்காத நிலையில் என் பகற்கனவின் சாத்தியங்கள் வெகுவாக குறைந்துள்ளதை இப்போது உணர முடிகிறது... 
கல்லூரிப் பருவத்தில் என் நண்பர்கள் மூலமாக இலக்கியத்தின் மீது தடுக்கி விழுந்தேன். எழுத்து என்னை வசீகரித்தது...  
கலைக்கே உள்ள குறும்புத்தனம் ரசிகனை மயக்கி படைக்கத் தூண்டி அவனை முட்டாளாக்கி முச்சந்தியில் நிறுத்துவது. அதுதான் என்னையும் இப்போது முச்சந்தியில் நிறுத்தியுள்ளது.
எழுத ஆரம்பித்த சில கணங்களிலேயே என்னுடைய பலவீனம் எனக்கு வெட்ட வெளிச்சமாகியது. எழுத்து புலன் நுகர்வு சம்பந்தப்பட்டது. செவி நுகர்வே அதிகம் உள்ள என்னால் சொல்லில் சித்திரங்கள் வரைய முடியாது. எனது வர்ணனை படிப்பவர்கள் மனதில் சித்திரத்தை எழுப்பாது....அப்புறம் ஏன் இந்த வீண் வேலை? என் எழுத்தின் மூலம் உங்கள் இதயத்தின் இசை நரம்புகளை மீட்ட முடியும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூ அதற்கான முயற்சி...
என்ன செய்வது? சில சமயம் என்னைப் பற்றிய மிகையான எண்ணங்கள் எனக்கு உண்டு..

7 comments:

  1. //கலைக்கே உள்ள குறும்புத்தனம் ரசிகனை மயக்கி படைக்கத் தூண்டி அவனை முட்டாளாக்கி முச்சந்தியில் நிறுத்துவது.

    அருமையான வரிகள்....
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நண்பனே வா!
    எங்கள் தாகம் தீர்க்க வா!

    ReplyDelete
  3. ஆமா! செவி நுகர்வு - ன்னு சொல்ற
    இசை நரம்பு - ன்னு சொல்ற

    நீ என்ன அந்த மாதிரி டாக்டரா?

    ReplyDelete
  4. இலக்கியத்தில் ஒரு ENT :-)

    ReplyDelete
  5. "சில சமயம் என்னைப் பற்றிய மிகையான எண்ணங்கள் எனக்கு உண்டு.." - Intha nambikaila than vazhkai odittu irukku.

    Vaazhthukkal.

    ReplyDelete