எழுதுவதற்கு உந்துதல் இல்லாமல் வெகுநாட்களாய் இருந்தேன்.. இந்தப் பாடல் என்னை எழுத வைத்தது..
என்னைப் போன்ற ஒரு சோம்பேறியை கூட தட்டி எழுப்பியப் பாடல், சிறந்த பாடலாகத்தான் இருக்க முடியும்.. (இப்போதெல்லாம், தமிழில் ஏன் இப்படி நல்ல பாடல்கள் வருவதில்லை?)
கொஞ்ச காலமாகவே ஹிந்தியில் உள்ள நல்ல பாடல் வரிகளை தமிழில் தர வேண்டும் என்ற எண்ணத்திற்கு முதல் புள்ளி வைக்கும் விதமாக இந்த பாடலில் இருந்து தொடங்க உத்தேசித்திருக்கிறேன்..
..
பாடல் : இக்தாரா..
படம் : Wake up Sid (2009)
இசை : அமித் த்ரிவேதி ( ஹிந்தி இசையின் வருங்காலம் இவர்)
வரிகள் : ஜாவித் அக்தர்.
பாடகர் : கவிதா சேத் (இவர் ஒரு சூபி பாடகி)
பாடல் பின்புலம் :
wake up Sid ஒரு Coming of Age திரைப்படம்.. கல்லூரியில் இருந்து கனவுகளோடு வெளியே வரும் ஒரு இளைஞனின் கதை. Sidharth-க்கு சிறந்த புகைப்பட கலைஞர் ஆக வேண்டும் என்று விருப்பம். தந்தையோ அவனை தொழில் வாரிசாக ஆக்க வேண்டிய பயிற்சிகளில் ஈடுபடுத்துகிறார். தந்தையுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியே வரும் sidhaarth-க்கு கிடைக்கும் நட்பு, அவன் கனவுகளை நோக்கி இட்டு செல்கிறது..
இந்த சமயத்தில் வரும் பாடல்தான் இது...
O re manwa tu to bawra hai..
Tu hi jaane tu kya sochta hai..
Tu hi jaane tu kya sochta hai... Baware
Kyun dikhaye sapne tu sote jaagte
Tu hi jaane tu kya sochta hai..
Tu hi jaane tu kya sochta hai... Baware
Kyun dikhaye sapne tu sote jaagte
Jo barsein sapne boond boond...
Nainon ko moond moond...
Nainon ko moond moond...
Jo barsein sapne boond boond...
Nainon ko moond moond..
Kaise main chaloon,
Dekh na sakoon,
Anjaane raaste..
Goonja sa hai koi iktara iktara..
Goonja sa hai koi iktara..
Goonja sa hai koi iktara iktara..
Nainon ko moond moond...
Nainon ko moond moond...
Jo barsein sapne boond boond...
Nainon ko moond moond..
Kaise main chaloon,
Dekh na sakoon,
Anjaane raaste..
Goonja sa hai koi iktara iktara..
Goonja sa hai koi iktara..
Goonja sa hai koi iktara iktara..
Goonja sa hai koi iktara..
Dheemi bole koi iktara iktara..
Dheemi bole koi iktara...
Goonja sa hai koi iktara iktara...
Goonja sa hai koi iktara..
மொழியாக்கம் :
ஓ மனமே, நீ கொஞ்சம் பைத்தியம்..
உனக்கு மட்டுமே தெரியும் உன் எண்ணங்கள்...
உனக்கு மட்டுமே தெரியும் உன் எண்ணங்கள்.... பைத்தியமே...
ஏன் காட்டுகிறாய் கனவுகளை, உறக்கத்திலும் விழிப்பிலும்?
கனவின் வழியும் துளிகள் துளிகள்..
நிறைக்கிறது கண்ணை...
கனவின் வழியும் துளிகள் துளிகள்..
மறைக்கிறது கண்ணை...
பார்க்க முடியவில்லை...
எப்படி செல்வேன்
தெரியாத பாதையில்.........?
எங்கேயோ ஒரு தம்புரா ரீங்கரிக்கிறது...
எங்கேயோ ஒரு தம்புரா ரீங்கரிக்கிறது...
எங்கேயோ ஒரு தம்புரா மெதுவாய் பேசுகிறது..
எங்கேயோ ஒரு தம்புரா ரீங்கரிக்கிறது.....
'இக்தாரா' என்பது ஒரு கம்பி மட்டுமே உள்ள இசை கருவி (மீரா கையில் இருப்பது)... அதற்கு தமிழில் என்ன என்று தெரியாததால் 'தம்புரா' வை இசைக்க வேண்டியதாக போயிற்று.. :-) .
எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்பதுபோல் மொழியாக்கத்தில் சில சுதந்திரங்கள் எடுத்துக் கொண்டுள்ளேன்.. பொறுத்தருள்க.
நானும் Sidhaarth-ஐ போல கண்ணை மறைக்கும் கனவுகளோடு, தெரியாத பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.... ஒரு தம்புராவின் ரீங்காரம் வேண்டி......