1) ஜனவரியில் நண்பனுடன் ' வாரணம் ஆயிரம் ' திரைப்படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது திரையில் பெயர்ப்போடும் போது ஒலித்த பல பாடல்களில் ஒன்று 'கோடைக்காலக் காற்றே' என்ற பாடல். பல வருடங்களுக்குப் பின் அந்த பாடலை கேட்டதற்கு கௌதம் மேனன்-உக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தப் பாட்டைக் கேட்காமல் வாழ்நாளில் பல வருடங்களை வீணடித்து விட்டோம் என்ற எண்ணம் ஏற்ப்பட்டது. வேலைப் பளு காரணமாக மறந்தும் போனேன். சில நாட்களுக்கு பிறகு நினைவு வர, Cool Toad சாமியின் கருணையினால் அதை தரவிறக்கிக் கேட்டேன். இந்தப்பாடல் ராஜாவின் 'பன்னீர் புஷ்பங்கள்' படத்தில் வருகிறது..
பொதுவாக Chord Progression-ல் வரும் மாற்றங்கள்(scale changes) இந்த பாடலின் மெட்டிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பின்னணி இசையே இல்லாமலும் இந்த பாடலின் மெட்டு சுகம் தரவல்லது. vintage ராஜா. இன்னொரு அம்சம் கம்பீரமாய் ஒலிக்கும் மலேசியா வாசுதேவன் குரலை, பள்ளிப் பருவக் கதையாகயால் மென்மையாகப் பயன்படுத்தி இருப்பது...
2) சிறு வயது முதலே 'செம்மீன்' படத்தில் வரும் 'மானச மைனே வரு' என்ற பாடலைத் தெரிந்திருந்தேன். தெரிந்திருந்தேனேத் தவிர அறிந்திருக்கவில்லை. சில மாதங்கள் முன் ஒரு மலையாளத் தொலைக் காட்சி நிகழ்ச்சியில் இந்த பாடலை ஒருவர் நான்கு வரி பாடினார். உடனே இந்த பாடலின் மீது ஒரு ஈர்ப்பு. தரவிறக்கினேன். சலில் சௌத்ரி-இன் இசையில் வந்தப் பாடல்.. 1965-ல் மன்னா டே பாடியது..
இசை விமர்சகர் ஷாஜி அவரது புத்தகத்ததில் சலில் சௌத்ரி-யை ராஜா-வின் முன்னோடி என்று குறிப்பிட்டிருந்தது, எனக்கு கொஞ்சம் கோபத்தை வரவழைத்தது. இசை அமைக்கப்பட்டக் காலத்தை மனதில் வைத்து பாடலைக் கேட்டால் சலில்-தா உண்மையிலேயே முன்னோடிதான். மெட்டாகட்டும், இசைக் கோர்ப்பாகட்டும், சலில் அந்த காலத்திலேயே வெகு இயல்பாய் இந்த பரிட்சார்த்தங்களை செய்து பார்த்திருக்கிறார். வங்காளியான சலில்-தா பல மலையாளத் திரைப்படங்களுக்கு இசை அமைத்தவர்!!
இன்னொரு விசேஷம் இந்த பாடலை பாடிய வங்காளியான மன்னா டே- யின் மலையாள உச்சரிப்பு.. என்னை விட மோசமாய் மலையாளத்தை உச்சரிக்கும் ஒருவர் மன்னா டே என்று நினைக்கிறேன்...
3) சமீபத்தில் 'சிவா மனசுல சக்தி' என்று ஒரு மொக்கைப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு காட்சியில் 'கோபுர வாசலிலே' படத்தில் வரும் 'காதல் கவிதைகள் படித்திடும் நேரம்' என்ற பாடலின் சரணம் ஒலித்தது(அந்த படத்தில் இருந்து பெற்றுக் கொண்ட ஒரே உருப்படியான விஷயம்). கடந்த நான்கைந்து வருடங்களாக இந்தப் பாடலை கேட்கவில்லை என்று பட்டவுடன் தரவிறக்கினேன்..(இணையம் இல்லையேல் இறந்தே போவேன்). துள்ளலானப் பாடல். violin/flute prelude என்று அட்டகாசமான ஆரம்பம். 1st interlude-ல் இளம் காதலைப் பிழிந்துள்ள ராஜா, 2nd interlude-ல் பயமுறுத்துகிறார்.
கடைசியாக, ரஹ்மான் 'ஆஸ்கார்' விருது வென்ற பிறகு, இணையத்தில் ராஜா-வா ரஹ்மானா என்று பல இசை வெறியர்கள் கட்டிப்புரண்டு சண்டையிட்டதை கவனித்தேன்...
மேல்சொன்னவைப் போன்ற நூற்றுக்கணக்கான பாடல்களை நான் மறந்ததர்க்கு ரஹ்மானின் இசை ஒரு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்..
இதுவே நான் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டும், பாராட்டும்..
Wednesday, April 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
சிவா,
ReplyDeleteராஜா ஒரு பெரிய சலில்-da ரசிகர். "Kadhal Kavithaigal" - enakku romba pidicha Raja paatugalil oru paatu. Athula vara antha isai pravagam... chance-a illai...nalla selection machi.... ippo nan atha kekka ready aiten....
Nee solli irukkara antha classic "ARR periya aala...Raja periya aala" sandai....nama chinna moolaiku puriyatha oru samacharam..... All the Music directors are great in their own rights. But ARR was much more accomodative and adaptible. Hindi padathukku Hindusthaniyum... western scores for western films... thats his success.....
//சமீபத்தில் 'சிவா மனசுல சக்தி' என்று ஒரு மொக்கைப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ReplyDeleteஅந்த படத்த ஏன்டா பார்த்த..?
ஆனந்த விகடன்-ல சன் டிவிக்கு நேரா அந்த படத்த அந்த ஓட்டு ஓட்டும்போதே உனக்கு புரிஞ்சிருக்க வேணாமா..?
இதே போல் ரஹ்மான் பாடல் வர போகும் ஒரு இருபது வருடங்களுக்கு பிறகு ஏதாவது ஒரு திரைப்படத்தில் இடம் பிடிக்குமா என்பது சந்தேகமே....அப்படியே இடம் பிடித்தாலும், நீ இப்பொழுது செய்தது போல் வேறு ஒருவர் தரவிறக்கி கேட்பாரா என்பதும் சந்தேகமே...
இன்னும் 3 தலைமுறை கழித்தும் ipod போன்ற ஒரு பாட்டு கருவியில் இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கும்....ரஹ்மான் கேள்விக்குறியே...!!
ஆனால் இருவருமே இசை ஞானிகள் என்பதில் துளி அளவும் மாற்று கருத்தில்லை....
இல்லை ஜெகா..
ReplyDeleteநான் அப்பிடி நினைக்கலை...
ரஹ்மானின் இசை காலத்துக்கு ஏற்ற இசை...
காலத்தை வென்று நிற்கும் பாடல்களும் ரஹ்மானின் பெட்டகத்தில் உண்டு..
பெற்றவர்களையே மறந்து நிற்கும் காலகட்டத்தில், ரஹ்மான், ராஜா - வின் பாடல்கள் மறக்கப்படுவது இயற்கையே..
ஆனால், வந்து 17 வருடங்களுக்குப் பிறகும் trend-setter - ஆக இருப்பது ஒரு பெரும்சாதனை..
மெட்டமைப்பதில்.. மதன் மோகன், எம்.எஸ்.வி, ரோஷன், எஸ்.டி.பர்மன், கே.வி.எம் ஆகியோரது சாதனை மிகப்பெரியது..
பின்னால் வந்தவர்களுக்கு orchestration-ல் சாதிக்கதான் நிறைய வாய்ப்பு இருந்தது...
சலில், ராஜா, ஜி.ரவீந்தரன், ரஹ்மான் போன்றோர் அதை சிறப்பாகக் செய்தார்கள்.
ஒன்று மட்டும் நிச்சயம்...
இந்தியாவிலேயே most versatile ராஜாவும் ரஹ்மானும்.